Oct 30, 2024 - 04:56 PM -
0
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கல்வித் துறையில் சிறந்து விளங்குவது என்ற மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், புதிய இலச்சினை வெளியீடு மற்றும் ஒருடம் முழுவதுமான விழாக்கள் என்பனவற்றுடன் SLIIT இன் 25 வருட நிறைவுக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
SLIIT இன் வேந்தரும் தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக, SLIIT இன் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே, SLIIT இன் சிரேஷ்ட பிரதி உபவேந்தரும், தலைமை ஆசிரியருமான பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ ஆகியோருடன், பீடாதிபதிகள், கல்விசார் ஊழியர்கள், பணியாளர் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுடன் மறக்கமுடியாத நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த SLIIT இன் வேந்தரும் தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்னாயக குறிப்பிடுகையில், “கடந்த இருபந்தைந்து வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கல்வி வழங்கும் முன்னணி நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. SLIIT சிறந்த கல்வியை தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில்வழங்குனர்களால் அதிக தேவையைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்க முடிந்துள்ளது. 25 வது வருட நிறைவைக் கொண்டாடும் இந்தப் பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். எதிர்காலத்தில் SLIIT மேலும் உயர்ந்த இடத்திற்குச் செல்லும் என்றும், உயர்ந்த மட்டத்தை ஏற்படுத்தும் என்றும் நான் உறுதியாக நம்புகின்றேன்” என்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் லலித் கமகே அவர்கள், நிறுவனத்தின் சிறப்பு மைல்கற்கள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கமளித்ததுடன், SLIIT இன் கடந்த 25 ஆண்டுகால வரலாறு மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் கருத்துரைத்தார். நிறுவனம் கடந்து வந்த முக்கிய மைல்கற்கள் மற்றும் தனித்துவமான சாதனைகளை அவர் எடுத்துக்காட்டியதுடன், SLIIT இலங்கையில் முன்னணி கல்வி வழங்குனராக உருவெடுத்து எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். SLIIT இன் பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் வகையில் வருட நிறைவு இலச்சினையும் இங்கு வெளியிடப்பட்டது. முதன் முதலில் பேராசிரியர் லலித் கமகு அவர்களினால் உருவாக்கப்பட்ட இந்த இலச்சினை, 25வது வருட நிறைவை முன்னிட்டு SLIIT இன் கட்டட வடிவமைப்புப் பிரிவின் விரிவுரையாளர் திரு.ரஞ்சக கல்கெதரவினால் நவீனமயப்படுத்தப்பட்டது.
SLIIT இன் உபவேந்தரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், “SLIIT இன் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், எங்களின் தரமான கல்வி, ஆராய்ச்சிக்கான முன்னுரிமை மற்றும் வலுவான கூட்டாண்மை ஆகியவற்றால் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் முதல்நிலை அரசசார்பற்ற உயர்கல்வி நிறுவனமாக மாறுவதற்கு நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கின்றோம்.
நாம் இன்று எமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளோம். இது புதுமை, புத்தாக்கம் மற்றும் எமது பீடங்கள், சமூகத்தை ஒன்றிணைந்து முன்னோக்கிக் கொண்டு செல்வதில் காணப்படும் அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைகின்றது. தலைவர்களாகவும், புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும் வளர்ச்சி பெற்றுள்ள எமது பழைய மாணவர்கள் நிறுவனத்தின் நோக்கத்தின் மாற்றத்துக்கு உயிர்கொடுத்து வருகின்றனர். முன்னோக்கிப் பார்க்கையில், மருத்துவம் போன்ற புதிய துறைகளில் முன்னேறவும், எங்கள் வளாகங்களை விரிவுபடுத்தவும், மேலும் இலங்கைக்குள் அதிக வருமானத்தைக் கொண்டு வருவதன் மூலமும், திறமைகளை நாட்டிற்குள் தக்கவைத்துக்கொள்வதன் மூலமும் எமது சமூகத்திற்கு ஏதாவது ஒன்றை மீண்டும் திருப்பிக் கொடுப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் எப்பொழுதும் எமது மாணவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், இலங்கையிலும் அதற்கு அப்பாலும் அடுத்த 25 வருட கற்றல், புத்தாக்கம் மற்றும் நேர்மறையான மாற்றங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
பேராசிரியர் கமகே குறிப்பிடுகையில், கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு SLIIT இன் வெற்றிக்கு வழிவகுத்த முக்கிய காரணிகளாகும் என்றும், இதுவே சவால்களை சமாளிப்பதற்கும், உயர்கல்வித் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கியது என்றார். அவரது செய்தி பணியாளர்களிடமும் மாணவர்களிடமும் ஒரே மாதிரியாக எதிரொலித்தது என்பதுடன், சமூகத்தையும் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கு ஊக்கமளித்தது.
கடந்த வருடங்களில் இன் பயணம் மற்றும் அதன் அடைவுகளை நினைவுபடுத்தும் வகையில் பிரதி உபவேந்தர் (ஆய்வு மற்றும் சர்வதேசம்) பேராசிரியர் சமந்த தெளிஜ்ஜகொட இதயபூர்வமான நன்றிறுரையை நிகழ்த்தினார். வருடம் முழுவதுமான கொண்டாட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், SLIIT’s Got Talent இன் T-shirts மற்றும் SLIIT Walk அழைப்பிதழ்களும் வேந்தர்கள், மூத்த துணைவேந்தர்கள் மற்றுமு் SLIIT இன் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு அடைவைக் குறிக்கும் வகையில், SLIIT முழு சமூகத்தையும் வருடம் முழுவதுமான தொடர் நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்ள அழைக்கின்றது. இது தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு காத்திருங்கள் மற்றும் இந்த வரலாற்று பயணத்தின் ஒரு பகுதியாக இணைந்திருங்கள்.