செய்திகள்
மேலும் இரு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Oct 30, 2024 - 05:15 PM -

0

மேலும் இரு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு  நவம்பர் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இதற்கு மாற்றீடாக எதிர்வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூல அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05