செய்திகள்
வெலே சுதாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு

Oct 30, 2024 - 05:52 PM -

0

வெலே சுதாவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு

வெலே சுதா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நிறைவு செய்த கொழும்பு மேல் நீதிமன்றம், வழக்கிற்கான தீர்ப்பினை எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி அறிவிப்பதாக இன்று (30) அறிவித்துள்ளது.

 

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 17 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணம் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பளை விதானத்தைச் சேர்ந்த சமந்த குமார எனப்படும் வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

இந்த வழக்கில் வெலே சுதாவின் மனைவி மற்றும் உறவினர் ஒருவரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, நீண்ட நேர சாட்சிய விசாரணைக்கு பிறகு விசாரணையை முடித்து வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05