Oct 30, 2024 - 09:13 PM -
0
இரண்டு பிரபல மதுபான நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்து, அரசாங்கத்திற்கு கிடைக்கவேண்டிய பெருந்தொகையான வரியை இழக்க வைக்கும் சம்பவம் தொடர்பில் அத தெரண உகுஸ்ஸாவிற்கு இன்று தகவல் கிடைத்தது.
தம்பதெணிய-முத்துகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சட்டவிரோத செயல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பிரகாரம் குளியாப்பிட்டி கலால் நிலைய அதிகாரிகள் குழுவுடன் விசாரணைகளை மேற்கொண்டோம்.
அந்த இடத்தில் இரு மதுபான நிறுவனங்களின் பெட்டிகள், லேபிள்கள் மற்றும் போத்தல் மூடிகள் என்பன அதிகளவில் காணப்பட்டன.
மேலும், உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களுக்கான பிரத்தியேக பற்றுச்சீட்டுகள், மதுபான பரிசோதனை கருவிகள் மற்றும் தரம் அளவீட்டு கருவிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் குளியாபிட்டிய கலால் அதிகாரிகள் அந்த வீட்டை சோதனையிட்டனர்.
அங்கு, நாட்டில் 14 கலால் ஆய்வாளர்களின் பல போலி முத்திரைகள், சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட வரி ஸ்டிக்கர் ரோல்கள் மற்றும் மதுபான போத்தல்கள் சீல் வைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.