Oct 31, 2024 - 07:31 AM -
0
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் பெற்ற, உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்த இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்றார்கள் என்று செய்திகள் பரவின.
கடந்த இரண்டு வருடங்களாக அந்த வீடியோ வெளியாவது குறித்து எந்த தகவலும் நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து வராத நிலையில் தற்போது அந்த வீடியோ நவம்பர் 18 ஆம் திகதி வெளியாகும் என்று நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.
'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் 1.21 மணி நேரம் கால அளவு கொண்ட படமாக இது இருக்கும் என்று நெட்பிளிக்ஸ் பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1.21 மணி நேரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நயன்தாராவின் பேட்டி, திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.