செய்திகள்
ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் கைது

Oct 31, 2024 - 08:19 AM -

0

ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் கைது

210 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஹரக் கட்டாவின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைதான இருவரும் நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவரது போதைப்பொருள் வியாபாரத்தை பராமரித்து வந்த பாதாள உலக உறுப்பினரான 'ஆர்மி சூட்டி'யின் உதவியாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

 

கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 6.910 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1.17 கிலோ ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. 

Comments
0

MOST READ
01
02
03
04
05