செய்திகள்
வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

Oct 31, 2024 - 11:30 AM -

0

வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை நீக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 

“ஜனாதிபதிகளின் வீடுகள் அகற்றப்படுகின்றன, எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

 

நான் அந்த வீட்டில் இல்லை. இது எனக்கு ஒரு பிரச்சனை அல்ல.

 

சந்திரிகா மேடம் வெளியேற்றப்படுவது ஏன்? அந்த வீட்டை அவருக்குக் கொடுங்கள். மனிதாபிமான ரீதியாக இதனை கூறுகிறேன்.

 

மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வந்தவரை நினைத்து பாருங்கள்.

 

இன்று எல்லாரும் ஒரே மாதிரி கூக்குரலிடுகிறார்கள். அது இன்னொன்று. இன்று மக்கள் மத்தியில் யாரும் பிரபலமாக இல்லை.

 

பாதுகாப்பு பிரச்சினை இருந்தால், யாருக்கேனும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதை நிறுத்த வேண்டாம்.

 

என்னுடைய அனைத்தையும் அகற்றிவிட்டு மற்றவர்களுக்கு வழங்குங்கள்.

 

தற்போது சம்பளம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சொன்னதைச் செய்யுங்கள், அனைவரின் ஆதரவும் உண்டு. நான் இந்த பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டும் என்றே நினைத்தேன்" என்றார்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05