Oct 31, 2024 - 11:41 AM -
0
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழர்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (31) காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இன்று காலை கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ புரண சுதாகர குருக்களின் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது நாட்டிற்கு நன்மை வேண்டியும், நாடு சுபீட்சமடையவும் விசேட யாகம் மற்றும் அபிசேகமும் நடாத்தப்பட்டது.
இன்றைய தீபாவளி பூஜை வழிபாடுகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
--