செய்திகள்
அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

Oct 31, 2024 - 03:05 PM -

0

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

தற்போதுள்ள அமைப்பை மாற்றுவதற்கு துணிச்சலான எதிர்கட்சியை உருவாக்குவதற்கு சர்வஜன அதிகாரத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீர மக்களிடம் கோருகின்றார்.

 

ரத்தோலுகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

அங்கு உரையாற்றிய அவர்,

 

“அமைச்சர் விஜித ஹேரத், பணம் அச்சடிக்கப்படவில்லை என தெரிவிக்கிறார்.

 

அச்சடிக்கப்பட்டிருந்தால் அதில் அநுரகுமாரவின் கையொப்பம் இருக்க வேண்டுமாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

அவர் சுமார் 25 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்தார்...என்னைப் போலவே களனிப் பல்கலைக்கழகத்திலும் படித்தார்."

 

“பணம் அச்சடிப்பது என்பது ரூபாயில் காகிதத்தில் அச்சடிப்பதில்லை,

அதாவது இது நாட்டின் பணப்புழக்கமாகும்.. பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதாகும்.

 

"அமைச்சர் விஜித ஹேரத்துக்கு தெரியாது என்று நான்  நினைக்கிறேன்... இந்த எளிய பொருளாதாரக் கருத்து."

 

"இலங்கையின் நாணயம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது... அதாவது விரைவில் பொருட்களுக்கு செலுத்தப்படும் பணத்தின் அளவு அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரிக்கும்."

 

"நாங்கள் உங்களுக்காகவே ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கினோம்.

 

நீங்கள் காலையிலேயே எழுந்து வாக்களிப்பதால் எந்தவொரு நட்டமும் ஏற்படாது.

 

முதன்முறையாக நாங்கள் துணிச்சலான எதிர்க்ட்சியை உருவாக்குவோம். உங்களுக்கு ஆதரவாக நிற்கவே எதிர்க்கட்சி உள்ளது என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05