செய்திகள்
14ஆம் திகதிக்கு பின்னர் வேலை நிறுத்தமே இருக்காது

Oct 31, 2024 - 07:18 PM -

0

14ஆம் திகதிக்கு பின்னர் வேலை நிறுத்தமே இருக்காது

வேலைநிறுத்தங்கள் காரணமாக நாடு எதிர்நோக்கும் விரும்பத்தகாத அனுபவங்கள் நவம்பர் 14ஆம் திகதிக்குப் பின்னர் முடிவுக்கு வரும் எனவும், இதுவே இந்த மாற்றக் காலம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.

 

கெஸ்பேவ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

 

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வேலைநிறுத்தம் என்றால் என்ன என்று கூட சொல்லித்தர வேண்டிய நிலை வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் கருத்து தெரிவித்த லக்ஷ்மன் நிபுணராச்சி,

 

“எங்கள் நாடு மிகவும் விரும்பத்தகாத அனுபவங்களை சந்தித்துள்ளது.

 

மாணவர்கள் பாடசாலைக்கு செல்கிறார்கள்..அந்த நாள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம், மற்றொரு நாள் அதிபர் வேலைநிறுத்தம், மற்றொரு நாள் கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

 

 உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றால், மருத்துவர்கள் வேலை நிறுத்தம், மற்றொரு நாள் தாதியர்கள், மற்றொரு நாள் உதவியாளர்கள் வேலை நிறுத்தம்.

 

ஒரு நாள் வீதியில் இறங்கினால்.. இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வேலை நிறுத்தம், மறுநாள் வீதியில் இறங்கினால் தனியார் பஸ் வேலை நிறுத்தம். இது போன்ற வரலாறே காணப்படுகிறது.

 

இன்று நான் சொன்னதை நினைவில் வையுங்கள். அந்த வேலை நிறுத்த வரலாறு எதிர்காலத்தில் இல்லாதொழியும்.

 

யாருக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறீர்கள்? அரசுடன் ஏதாவது பிரச்சினை என்றால் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்.

 

இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் 10 முதல் 15 வருடங்களில் வேலை நிறுத்தம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்குவோம்.

 

அதபோல் ஊரடங்குச் சட்டத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் மகனே.. இதுதான் ஊரடங்குச் சட்டத்தின் அர்த்தம் என்று.

 

இது எதுவுமே இல்லாமல் ஒரு நல்ல நாட்டை உருவாக்குவோம். பொய்யா என்று பாருங்கள். இது மாற்றத்தின் காலம். இந்த வேலை நிறுத்த காலம் நவம்பர் 14க்குப் பிறகு முடிவடையும்" என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05