செய்திகள்
தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாவது நாள் இன்றாகும்

Nov 1, 2024 - 07:21 AM -

0

தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாவது நாள் இன்றாகும்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும் (01).

 

கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் நாளாக தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்றது.

 

இதன்படி முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளிப்புக்காக இன்று சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

 

மேற்குறிப்பிட்ட தினங்களில் தபால் மூல வாக்களிப்பினை அளிக்க முடியாத தபால்மூல வாக்காளர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால் மூல வாக்களிப்புக்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05