செய்திகள்
பல்கலை மாணவர்கள் பேருந்து விபத்தில் இருவர் பலி

Nov 1, 2024 - 09:35 AM -

0

பல்கலை மாணவர்கள் பேருந்து விபத்தில் இருவர் பலி

Update

November 1, 2024   09:35am

 

பதுளை, துன்ஹிந்த வீதியில் 04 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 02 பேர் உயிரிழந்தனர்.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

விபத்தின் போது பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் உட்பட 41 பேர் பயணித்துள்ளனர்.

 

விபத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

--

இன்று (01) காலை 7.45 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

பதுளை மஹியங்கன பிரதான வீதியின் நான்காவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் (துன்ஹிந்த நுழைவு வீதிக்கு அருகில்) பேருந்து கவிழ்ந்துள்ளது.

 

இந்த விபத்தில் 35 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதன்போது குறித்த பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05