Nov 1, 2024 - 04:09 PM -
0
வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்களான யசோதினி கருணாகரன், வன்னி மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் யாழ். மாவட்ட வேட்பாளர் ஆகிய இருவரும் இன்று (01) யாழ். மறை மாவட்ட ஆயரைச் சந்தித்தனர்.
இதன்போது தற்போதைய தேர்தலிலே வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் போராளி போட்டியிடுவதனை தான் வரவேற்பதாகவும், இதுவரை இடம்பெறுகின்ற அனைத்து தேர்தல்களிலும் ஆண்களையே முதன்மைப்படுத்தி வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதும் பெண் போராளிகளை அரசியலில் ஈடுபடுத்துவதனையும் வரவேற்பதாகவும் யாழ். மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞான பிரகாசம் தெரிவித்தார்.
இவர்களுடன் போராளிகள் நலன்புரி சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரனும் கலந்து கொண்டு ஆயரைச் சந்தித்தனர்.
--