செய்திகள்
லங்கா T10 போட்டித் தொடர் - அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!

Nov 1, 2024 - 08:19 PM -

0

லங்கா T10 போட்டித் தொடர் - அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள  லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபெறவுள்ள  6 அணிகளின் பெயர்கள்  இன்று (1) பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கோல் மார்வெல்ஸ், ஜப்னா டைட்டன்ஸ், கெண்டி போல்ட்ஸ், ஹம்பாந்தொட பங்களா டைகர்ஸ் மற்றும் நிகம்பு பிரேவ்ஸ் ஆகிய அணிகள் ஆரம்பப் போட்டிக்கு இணையும் அணிகள் என பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்த போட்டித்தொடருக்கான வீரர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் நடைபெற உள்ளது.

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்தப் போட்டி டிசம்பர் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05