Nov 2, 2024 - 04:22 PM -
0
தற்போது இடம்பெற்று வரும் ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரில் இலங்கை அணி நேபாள அணியை 40 ஓட்டங்களால் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
அரையிறுதிப் போட்டிக்குச் சென்ற மூன்றாவது அணியாக இலங்கை அணி காணப்படுகிறது.
முன்னதாக அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோதியிருந்தன.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
124 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.