Nov 2, 2024 - 04:37 PM -
0
புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (01) இலங்கை கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் இணைந்து புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பொருட்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஐஸ் போதைப்பொருள் 8 கிராம் , 320 வெளிநாட்டு சிகரெட்டுகள், 440 லீற்றர் கோடா மற்றும் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஸ்பிரிட் மற்றும் 100 லீற்றர் மதுபானம் என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் 28 மற்றும் 39 வயதுடைய பாலவி மற்றும் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.