செய்திகள்
அறுகம்பே சம்பவம் தொடர்பில் அறுவர் கைது

Nov 2, 2024 - 08:30 PM -

0

அறுகம்பே சம்பவம் தொடர்பில் அறுவர் கைது

தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பிரஜை ஒருவரும் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


அறுகம்பே பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், கொழும்பின் பொருளாதார மத்திய நிலையத்தை புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,


"சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக தகவல் கிடைத்தது. தகவல் வந்தவுடன், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். வெளிநாட்டினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இதை சாதகமாக்க எதிர்கட்சிகள் காத்திருந்தது உண்மை கதை. எனவே ஏற்கனவே 6 பேரை கைது செய்துள்ளோம். மாலத்தீவு பிரஜை மற்றும் 5 இலங்கையர்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த விசாரணைகளின் ஊடாக இது எவ்வாறான தாக்குதலுக்கான திட்டம் என்று எம்மால் உறுதியாக இன்னும் கூற முடியாதுள்ளது. இது ஒரு முயற்சி என்றும் கூற முடியாது, ஏனெனில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சோதனைகள் மூலம் அவ்வாறானதொரு முடிவுக்கு வர முடியாது. எனவே இது தொடர்பில் தவறான புரிதல்கள் தேவையில்லை எனினும் நாட்டு மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்புகின்றனர். எனவே நாங்கள் மூவரடங்கிய அமைச்சரவையை கூட்டி பாதுகாப்புச் சபைக்கு அழைப்பு விடுத்தோம். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார், நாங்கள் இப்போது எல்லா நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.

Comments
0

MOST READ