Nov 2, 2024 - 10:30 PM -
0
சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% வீதமானவை தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தரமற்ற பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக உலக புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிறுவர்களுக்கு வழங்கப்படும் மற்றும் பயன்படுத்தும் உணவுப் பெட்டிகள், தண்ணீர் போத்தல்கள் என்பன தரமற்றவையாக காணப்படுவதாக என 'அத தெரண'வும் பல சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு வெளிப்படுத்தியது.
இன்றும் தரமில்லாத இவ்வாறான பொருட்கள் உள்நாட்டு சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இந்த பொருட்கள் சிறுவர்களுக்கு பாரிய ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்தார்.
"பிள்ளைகள் பயன்படுத்தும் மதிய உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களில் 75% வீதத்திற்கும் அதிகமானவை பொருத்தமற்ற பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை என்பதை நாம் தெளிவாகக் காணலாம். இவைகள் சீனா போன்ற நாடுகளில் இருந்து கட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்யப்படுகிறது. இவை பிள்ளைகளை மிகவும் ஆபத்தான முறையில் பாதிக்கிறது."
இருப்பினும், சந்தைக்குச் செல்லும் வாடிக்கையாளர் இந்தப் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் புரிதல் உள்ளதா என்று கேட்டோம்.
பல நுகர்வோர் தயாரிப்பின் விலை மற்றும் அதன் அழகைப் பற்றி மட்டுமே அவதானிப்பதாக தெரிவிக்கின்றனர்.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, உணவு மற்றும் தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் போது, அதன் கீழ்ப்பகுதியில் BPA அல்லது கீழே 5 என்ற எண் எழுதப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
இல்லையெனில், பொருட்களில் கண்ணாடியுடன் ஒரு முட்கரண்டியின் குறி இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.
இந்த இரண்டு அறிகுறிகளும் இருந்தால், இதுபோன்ற சாதனங்கள் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் பயன்படுத்த ஏற்றது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தையில் பல்வேறு இலக்கங்களுடன் விற்பனை செய்யப்படும் கவர்ச்சிகரமான மதிய உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
"1980ஆம் ஆண்டின் உணவுச் சட்டம் எண் 26ன் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம். எதிர்காலத்தில் விசேட கவனம் செலுத்தி சோதனைகளை மேற்கொள்வோம்"