Nov 3, 2024 - 11:21 AM -
0
மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது புதிய சீசன் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில், புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமானது. விஜய் சேதுபதி அவருக்கென தனி பாணியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிறகு, முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இரண்டாவது வாரத்தின் இறுதியில் அர்னவ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
மூன்றாவது வாரத்தின் இறுதியில் தர்ஷா குப்தா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த வார எவிக்ஷனில் டேஞ்சர் ஸோனில் இருப்பவர் பவித்திரா மற்றும் அன்ஷிதா. ரசிகர்களின் வாக்களிப்பின் அடிப்படையில் அன்ஷிதா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.