Nov 3, 2024 - 12:52 PM -
0
ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ஜிஷான் அலாம் 36 ஓட்டங்களையும் மொஹமட் ஷிப்புதின் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 4 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 104 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக சந்துன் வீரக்கொடி 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த வெற்றியின் ஊடாக ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.
பலம் பொருந்திய பாகிஸ்தான் அணியை இலங்கை அணி இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.
குறித்த போட்டியானது இன்று பிற்பகல் 2.10 மணிக்கு இடம்பெறுகிறது.