Nov 3, 2024 - 05:17 PM -
0
முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்களின் பாதுகாப்பு, மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (03) பிற்பகல் விசேட செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் பாணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் எம்.பி.பி.நளின் ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
இந்த செய்தி பிரதான நாளிதழ் ஒன்றிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்தத் தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே X தள குறிப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.