சினிமா
அந்த விஷயங்களை காட்ட வேண்டும்!

Nov 3, 2024 - 06:23 PM -

0

அந்த விஷயங்களை காட்ட வேண்டும்!

200 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தன்னுடையை 69 ஆவது படத்தில் நடித்துவிட்டு முழு அரசியலில் ஈடுபடவுள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த மாதம் கட்சியின் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தி இருந்தார்.

 

8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் சூழ, விஜய் காரசாரமாக பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல பிரபலங்கள் ஆதரவளித்தும் எதிர்த்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்நிலையில் பாஜக கட்சியில் தமிழக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் நடிகை நமீதா, விஜய்யின் அரசியல் பேச்சு பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

 

அதில், தளபதி விஜய்யின் அரசியல் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் விணாக பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டே இருக்காமல் செயலில் அந்த விஷயங்களை காட்ட வேண்டும் என்று விமர்சித்து பேசியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05