Nov 4, 2024 - 09:24 AM -
0
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத் தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.
முகமது ரிஸ்வான் தலைவராகவும், சல்மான் அலி ஆகா உப தலைவராகவும், நியமிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பாபர் அசாம், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:
அப்துல்லா ஷபீக், சைம் அயூப், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (தலைவர், விக்கெட் காப்பாளர்), கம்ரான் குலாம், சல்மான் அலி ஆகா ( உப தலைவர்), முகமது இர்பான் கான், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன்.