செய்திகள்
14 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி

Nov 4, 2024 - 10:07 AM -

0

14 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி

கல்கிரியாகம - கரவிலகல சந்தி அலியாமலகல கஹலுகந்த வீதியில், கிவுல உல்பாத கிளை வீதிக்கு திரும்பும் சந்தியில் கஹலுகந்த திசை நோக்கி பயணித்த விறகு ஏற்றிய கை உழவு இயந்திரம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

விபத்தின் போது கை உழவு இயந்திரத்திற்கு முன்னால் வீதிக்கு அருகில் இந்த சிறுவன் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த விபத்து நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வாகனத்தின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்த சிறுவன், கலாவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

 

நன்வத்தேகம நெகம்பஹா பிரதேசத்தில் வசித்து வந்த 14 வயது சிறுவனே சம்பவத்தில் பலியானார்.

 

விபத்து தொடர்பில் கை உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05