செய்திகள்
சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய தலைவர்

Nov 4, 2024 - 12:19 PM -

0

சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கட்டுநாயக்கவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று (04) அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

 

சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றியதோடு அதன் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

 

சுமார் மூன்றரை ஆண்டுகள் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

 

இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கென்பெரா பல்கலைக்கழகத்தின் சுங்க சட்டம் மற்றும் முகாமைத்துவ முதுகலைப் பட்டதாரியும் ஆவார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05