வணிகம்
குடியேற்றத்தில் ஏற்படும் சவால்களை Ardent Immigration Inc உடன் வெற்றிகொள்ளுங்கள்

Nov 4, 2024 - 01:52 PM -

0

குடியேற்றத்தில் ஏற்படும் சவால்களை Ardent Immigration Inc உடன் வெற்றிகொள்ளுங்கள்

வெளிநாட்டிற்கு இடம்பெயர்வதற்கான பொருத்தமான செயல்முறை மற்றும் அதற்கு தேவையான சட்ட கோரிக்கைகள் குறித்து தெரியாத பட்சத்தில் வெளிநாட்டில் பசுமையான மேய்ச்சல் நிலத்தை தேடி செல்வது மிகவும் சவாலான ஒரு விடயமாக காணப்படலாம்.

தொழில்முறை ரீதியான வெளிநாட்டு இடம்பெயர்வோ மாணவர் விசாவோ அல்லது உங்களுடைய முழு குடும்பத்துடன் நீங்கள் வேறொரு நாட்டிற்கு இடம்பெயருவதோ மிகவும் கடினமானதாக காணப்படலாம். ஆகவே இச்செயல்முறையானது மனஅழுத்தத்தை ஏற்படாததை உறுதிப்படுத்த பொருத்தமான உதவிகளை பெற்றுக்கொள்வது மிகவும் இன்றியமையாததொன்றாகும்.

Ardent Immigration Inc என்பது இடம்பெயர்வு உதவிகளிற்கு மிகவும் பெயர்பெற்ற நிறுவனமாக காணப்படுவதுடன் கனடா தேசத்திற்கு இடம்பெயர விரும்புபவர்களிற்கு காணப்படும் கடினமாக செயற்பாடுகளை இலகுவாக்க ஆரம்பம் முதல் இறுதி வரை தேவையான முழுமையான ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்கு இந்நிறுவனமானது முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. கடந்த பல ஆண்டுகளான இந்நிறுவனம் இயங்கி வருவதுடன் இவர்களின் சேவைகள் மூலம் நூற்றுக்கணக்கான வெற்றிகரமான இடம்பெயர்வுகளிற்கும் வழியமைத்துள்ளார்கள்.

இந்நிறுவனத்தின் சட்டம் மற்றும் ஆவணப் பிரிவின் தலைவர் கௌமதி கலகேதரா அவர்கள் கருத்து தெரிவிக்குகையில் 'கனடாவின் சிக்கலான குடியேற்ற பிரச்சினைகளை தீர்க்கவே Ardent Immigration Inc உருவாக்கப்பட்டது. கனடாவிற்கு வேலைக்காக அல்லது நிரந்தரமாக குடியேற விரும்புபவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆலோசனை வழங்குவதில் நாங்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளோம். இதன் மூலம் கடினமான இடம்பெயர்தல் செயல்முறையை உரிய ஆவணங்களுடன் சீராக முன்னெடுத்து வெற்றிகரமாக நிறைவு செய்கின்றோம். அத்துடன் சிக்கலான வழக்குகளையும் நாங்கள் எடுத்துக் கொண்டதற்கு பெருமை கொள்கிறோம். எங்களது சேவைகளின் மூலம் நாங்கள் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணையவும் மாணவர்கள் பல்கலைக்கழக சேர்க்கை பெறவும் மற்றும் திறமையான ஊழியர்களுக்கு வேலை விசா அனுமதியை பெற்றுக்கொள்ளவும் நாங்கள் உதவியுள்ளோம்' என்று தெரிவித்தார்.

Ardent Immigration Inc கனடாவில் சட்ட ஆலோசனை வழங்குவதோடு மட்டுமின்றி பல்வேறு குடியேற்ற சேவைகளையும் வழங்குகிறது. இச்சேவைகளில் பிஆர் கார்டு புதுப்பிப்புகள் குடியுரிமை விண்ணப்பங்கள் வீசா நீட்டிப்புகள் மற்றும் கனடாவில் உள்ள அகதி தொடர்பான வழக்குகள் அனுமதி மறுப்பு விசாரணைகள் மற்றும் தடுப்பு மதிப்பீடுகள் போன்றவையும் உள்ளடங்குகின்றன. இந்த சேவைகள் ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஐக்கிய இராச்சியம் அயர்லாந்து பின்லாந்து அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

Ardent Immigration Inc குழுவானது சசிர விமலவீர அவர்கள் தலைமை தாங்கி வருவதுடன் இவர் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்தல் ஆலோசகரும் (ஆல்பேர்டா, கனடா) (R706958), சட்டத்தரணியுமாவர் (இலங்கை);. இந்நிறுவனத்தின் ஒவ்வொரு துறையிலும் உள்ள குழு உறுப்பினர்கள் தொழில்முறையிலும் நம்பகத்தன்மையிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

ஆல்பேர்டா (கனடா) மற்றும் கொழும்பு (இலங்கை) ஆகிய இடங்களில் தலைமையகங்களை கொண்டு செயற்பட்டு வருகின்ற Ardent Immigration Inc நிறுவனமானது புலம்பெயர்தல் தொடர்பான சேவைகளிற்கு மிகவும் நம்பகமான இடமாக அறியப்பட்டு வருகின்றது. இது தொட்பிலான மேலதிக தகவல்களிற்கு 0112 581317 எனும் எண்ணிலோ அல்லது 770875330 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05