Nov 4, 2024 - 06:54 PM -
0
மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.
அதில் இருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 1,750 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
எனவே கலா ஓயாவை சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு ராஜாங்கனை நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் மாலையில் கனமழை பெய்தால், இரவு நேரத்தில் அதிக சில வான் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.