செய்திகள்
வீதி விபத்துக்களில் யுவதி உட்பட இருவர் பலி!

Nov 5, 2024 - 09:07 AM -

0

வீதி விபத்துக்களில் யுவதி உட்பட இருவர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நிகழ்ந்த வீதி விபத்துகளில் இளம் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

எஹெலியகொட மற்றும் பண்டாரகம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (04) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

எஹலியகொட, மின்னான - இத்தமல்கொட வீதியில் சொமிசந்தவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 கெட்டஹெத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை, பண்டாரகம - பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் பேருந்து மோதிய விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த யுவதி ஒருவர் பலத்த காயமடைந்து பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05