செய்திகள்
கணவனின் வைத்தியசாலையில் கொலை செய்யப்பட்ட பெண்!

Nov 5, 2024 - 12:25 PM -

0

கணவனின் வைத்தியசாலையில் கொலை செய்யப்பட்ட பெண்!

திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இன்று (05) காலை இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

உயிரிழந்தவர் வெளிநாட்டவர் என்பதுடன் அவர் தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் 03வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்துள்ளார்.  

 

உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரன் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், கொலையுடன் தொடர்புடைய 55 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அதே மாடியில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளார். 

 

சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05