Nov 5, 2024 - 01:29 PM -
0
புத்தாக்கமான மற்றும் வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்ட உள்ளக அலங்கார வடிவமைப்பு நிறுவனமான SUCCEED DESIGN, புதிய இணையத்தளமொன்றை அறிமுகம் செய்வதற்காக புகழ்பெற்ற டிஜிட்டல் சேவைகள் வழங்குநரான SLT-SERVICES உடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கைகோர்ப்பினூடாக, SUCCEED DESIGN இன் ஆக்கத்திறன், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் தன்னிறைவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இணையத்தளமொன்றை உருவாக்க எதிர்பார்ப்பதுடன், அதன் டிஜிட்டல் பிரசன்னத்தை மேம்படுத்தவும், ஈடுபாட்டுனான பாவனையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
உறுதியான தேசிய மற்றும் சர்வதேச கீர்த்தி நாமத்தைக் கொண்டுள்ள SUCCEED DESIGN, பரிபூரண, அதிகம் பேசப்படும் உள்ளக பகுதிகளை உருவாக்குவதில் விசேடத்துவத்தைப் பெற்றுள்ளதுடன், தமது வாடிக்கையாளர்களின் பிரத்தியேகமான அம்சங்கள் அல்லது வர்த்தக நாமங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. புதிய இணையத்தளத்தினூடாக அவர்களின் பரந்த சேவைகள் வெளிப்படுத்தப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் அலங்கார வடிவமைப்புக் கொள்கை மற்றும் செதுக்கல்திறன்கள் ஆகியவற்றில் கொண்டிருக்கும் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.
ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் துணை நிறுவனமாக SLT-SERVICES, இணையத்தள வடிவமைப்பு, SEO மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போன்றவற்றுக்காக நன்கறியப்படும் நிறுவனமாக அமைந்துள்ளது. உயர் தரம் வாய்ந்த, பாவனையாளர்களை மையப்படுத்திய இணையத்தளங்களை பெற்றுக் கொடுப்பதற்கு தன்னை அர்ப்பணித்த நிறுவனமாக டிஜிட்டல் சேர்விசஸ் அலகு அமைந்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, SLT-SERVICES இன் நவீன தொழில்நுட்பங்களை SUCCEED DESIGN இன் பிரசன்னத்தை மேம்படுத்தவும், புதிய சர்வதேச சந்தைகளை சென்றடையவும் ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும் (succeeddesign.lk).
கைச்சாத்திடும் நிகழ்வில் பங்காண்மை தொடர்பில் தமது ஈடுபாட்டை இரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளும் வெளிப்படுத்தியிருந்தனர். Succeed Interiors இன் முகாமைத்துவ பணிப்பாளர் தினேஷ் நாகந்தல, தமது பணியை வெளிப்படுத்தும் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பாடல்களை கொண்டிருக்கும் இணையத்தளமொன்றின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். SLT-SERVICES இன் டிஜிட்டல் சேவைகள் பிரதம அதிகாரி உபுல் மஞ்சநாயக்க, வியாபார செயற்பாடுகளை புரட்சிகரமானதாக்கிக் கொள்வதற்கும், புதிய சந்தைகளுக்கு விஸ்தரிப்பை மேற்கொள்வதற்கும் இதுபோன்ற கைகோர்ப்புகளின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.