Nov 5, 2024 - 01:36 PM -
0
புகழ்பெற்ற மெக் கரி வாசனைத்திரவிய வர்த்தகநாமத்திற்கு பின்னிருக்கும் கம்பெனியான, லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டானது செனஹச டாத் துவக்கத்தின் ஊடாக சமுதாய முன்னேற்றத்திற்கான தன்னுடைய அர்ப்பணிப்பினைத் தொடருகின்றது. இம்முறை, அதன் மூன்றாவது துவக்கத்தில் கொட்டாவை, பன்னிபிட்டியவிலுள்ள மே/ஜா வித்தியாதன மஹா வித்தியாலயத்திலான கவனம்செலுத்தப்பட்டதுடன் அங்கு நூலகத்திற்கான நூல்களும் நூலக மேசைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
செனஹச டாத் துவக்கமானது, கல்விக்கான சமமான அணுகலை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனான பாடசாலைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டவொன்றாகும். இத்திறப்பாட்டின் தொடர்ச்சியாக, மே/ஜா வித்தியாதன மஹா வித்தியாலயமானது நன்மை பெறும் பாடசாலையாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தது. லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டின் பதில் பிரதம சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர், வருண கருணாரத்ன, அவர்கள் கருத்துதெரிவிக்கையில், வாசிப்பானது அறிவினை வளப்படுத்துவது மாத்திரமின்றி மேலும் நிறைவான வாழ்வை வாழவும் சமூகத்திற்கு நேர்க்கணியமாக பங்களிக்கவும் தனிநபர்களை வலுவூட்டுவதுமான உண்மையில் பெறுமதிமிக்கவொரு பழக்கமாகும். ஒரு சமூக பொறுப்புமிக்க நிறுவனமாக, லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டாகிய நாம் எதிர்கால சந்ததியினரை வடிவமைப்பதிலான கல்வியின் பெறுமதியினை புரிந்துக்கொண்டுள்ளளோம். என்றார்.
வித்யாதன மஹா வித்தியாலயத்தின் அதிபர், கே.எம்.எஸ். சந்தன அவர்கள் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கையில், லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டிடமிருந்தான இந்த ஆதரவு எமது மாணவர்களிற்கானவொரு அரிய வாய்ப்பாகும். இது அவர்கள் பெறும் கல்வியின் தரத்தினை குறிப்பிடத்தக்களவில் அதிகரிக்கும் என்பதுடன், முன்னர் அடிப்படை வளங்களிற்கு தேக்கமுற்றிருந்த சூழலில் வெற்றிபெறவும் அவர்களை அனுமதிக்கும்.
கம்பெனியின் நீண்டகால தூரநோக்குகளை பற்றிக் கூறுகையில், கருணாரத்ன அவர்கள், எம்முடைய அர்ப்பணிப்புக்களின் தொடர்ச்சியாக, இலங்கையின் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கான ஆதரவினை நாம் தொடருவோம். எம்முடைய செனஹச டாத் துவக்கத்தின் ஊடாக, சமூக நலவாழ்வு மற்றும் சமுதாய நல்லிருப்புக்களினை நோக்கியதாக எம்முடைய முயற்சிகளை விஸ்தரிக்க நாம் நோக்கங்கொண்டுள்ளோம். வாசிப்பதற்கும் கற்பதற்குமான விருப்பத்தினை வளர்ப்பதனால், மேலும் அறிவூட்டப்பெற்றதும் பொறுப்புமிக்கதுமான சமூகத்தை கட்டமைப்பதற்கு பங்களிக்க நாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். என்றார்.
லங்கா ஸ்பைஸானது நிலைபேண் கல்வி அபிவிருத்திகளின் மீது கவனம்செலுத்தும் முற்போக்கு சிந்தனைக்கொண்ட செயற்றிட்டங்களின் தொடரொன்றுடன் செனஹச டாத் துவக்கத்தினை விரிவுபடுத்த தயாரகவுள்ளது. கைத்தொழிற்றுறை அறிவு மற்றும் அடிப்படை வாழ்க்கை மற்றும் தொழிற்றிறன்களை கட்டமைக்க மாணவர்களிற்கு உதவுவதற்காக பாடசாலைகளின் பங்காண்மையுடன், வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் கம்பெனி திட்டமிட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, லங்கா ஸ்பைஸானது, இலங்கையில் உயர் தரத்திலான வாசனைத்திரவியங்கள் மற்றும் மூலிகைகளிற்கான மறுபெயராக, அதனுடைய மெக் கரி வர்த்தகநாமத்தின் ஊடாக வாசனைத்திரவிய துறையில் தொடர்ந்தும் முன்னணிவகிக்கின்றது. செனஹஸ டாத் துவக்கத்துடன், கல்வித் துறையிலும் இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்திலும் நீடித்த தாக்கமொன்றை ஏற்படுத்த கம்பெனி அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.