Nov 5, 2024 - 01:42 PM -
0
ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம், மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய தனது ஊழியர்களின் சாதனைகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில், தாய்லாந்தில் விருதுகள் நிகழ்வொன்றை இந்த ஆண்டு நடாத்தியுள்ளது. அவர்கள் வெளிப்படுத்திய மிகச் சிறந்த பங்களிப்பிற்கு அங்கீகாரமளிக்கும் வகையில், சர்வதேச சுற்றுலாக்களை ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்வதில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், தனது ஊழியர்கள் மத்தியில் மகத்துவம் மற்றும் ஊக்குவிப்பு மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்நிகழ்வினூடாக மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. 2024 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஐந்து தினங்களாக இடம்பெற்ற இந்நிகழ்வானது, மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய தனது ஊழியர்களுக்கு முதல்முறையாக வெளிநாட்டு மண்ணில் வைத்து கௌரவிப்பை வழங்கியுள்ள வகையில் ஜனசக்தி நிறுவனத்தைப் பொறூத்தவரையில், சாதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லாக மாறியுள்ளது.
முகாமைத்துவ அணியுடன் இணைந்து, 75 க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் இப்பிரத்தியேக நிகழ்வில் பங்குபற்றியுள்ளதுடன், இதில் மதிப்புமிக்க விருது வழங்கும் வைபவமும் அடங்கியிருந்தது. ஊழியர்கள் ஆற்றியுள்ள மிகச் சிறந்த பங்களிப்புக்களுக்கு அங்கீகாரம் அளிப்பது மாத்திரமன்றி, ஐக்கியம் மற்றும் நட்புறவை வளர்ப்பதற்கான வாய்ப்பினையும் இக்கொண்டாட்டம் வழங்கியுள்ளது. விருது வழங்கும் வைபவத்தைத் தொடர்ந்து, இந்த பயணம் மறக்க முடியாத ஒன்றாக அமையும் வகையில் பல்விதமான விநோதாம்ச செயல்பாடுகளிலும் ஊழியர்கள் பங்குபற்றி மகிழ்ந்தனர்.
ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு குறித்து கருத்து வெளியிடுகையில், “மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்ற எமது ஊழியர்களுக்கு அங்கீகாரமளித்து, வெகுமதியளிப்பது ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் கலாச்சாரத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாய்லாந்து சுற்றுலாவானது மகத்துவத்தைப் போற்றிக் கொண்டாடி, உத்வேகம் கொண்ட ஊழியர்களை வளர்ப்பதில் எமது ஆழமான அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றது. எமது ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதனூடாக, அவர்கள் தமது தொழில்களில் இன்னும் மேலே உயர்வதற்கு நாம் அவர்களுக்கு உத்வேகமளிக்கின்றோம். சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்ற எமது ஊழியர்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் இன்னும் கூடுதலான சலுகைகள் மற்றும் முயற்சிகளை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தி, ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனத்தில் அவர்களுடைய அனுபவங்களை மேம்படுத்தவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
தனது ஊழியர்களை மேம்படுத்தி, அங்கீகாரம் மற்றும் வளர்ச்சிக்கான சூழலை வளர்ப்பதில் ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. மிகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்துகின்ற தனது ஊழியர்களைப் போற்றிக் கொண்டாடி, அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு ஊக்குவிப்பதற்காக, அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்களுக்கு அங்கீகாரமளிக்கும் முயற்சிகளை அறிமுகப்படுத்தும் செயல்பாட்டை நிறுவனம் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துவருகின்றது.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி குறித்த விபரங்கள்
1994 ஆம் ஆண்டில் ஒரு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி ஆயுள் காப்புறுதி), 30 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் புத்தாக்கத்தின் சிற்பியாகவும், அனைத்து இல்லங்களிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவும் தொழிற்துறையில் தன்னை முத்திரை குத்தியுள்ளது. ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் நாடெங்கிலும் வலுவான பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், வளர்ச்சி கண்டு வருகின்ற தனது வலையமைப்பின் கீழ் 80 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் பிரத்தியேக அழைப்பு சேவை மையமொன்றையும் கொண்டுள்ளது.
“வாழ்வுகளை மேம்படுத்தி, கனவுகளுக்கு வலுவூட்டுதல்” என்ற தனது நோக்கித்திற்கு அமைவாக, காப்புறுதி என்பதற்கும் அப்பாற்பட்ட சேவைகளை தனது வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கி, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக மாறுவதில் ஜனசக்தி ஆயுள் காப்புறுதி நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டுத் துறைகளில் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ள ஜனசக்தி குழுமத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாக ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி இயங்கி வருகின்றது.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் விபரங்கள் வருமாறு: பிரகாஷ் ஷாஃப்டர், ரவி லியனகே, ரமேஷ் ஷாஃப்டர், வரினி டி கொஸ்தா, அனிகா சேனாநாயக்க, சிவகிறிஷ்ணராஜா ரெங்கநாதன், கலாநிதி நிஷான் டி மெல், கலாநிதி கிஹான் குணதிலக மற்றும் திலிப் டி எஸ். விஜேரத்ன.