கிழக்கு
சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம்!

Nov 5, 2024 - 03:50 PM -

0

சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம்!

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம் நேற்று (04) செய்து வைக்கப்பட்டது.

 

மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சினி கணேசலிங்கம் ஏற்பாட்டில் இடம் பெற்ற அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து சிறப்பித்த நிகழ்விற்கு விசேட விருந்தினர்களாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பாலித்த குணரத்ன மகிபால, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

சுமார் 320 மில்லயன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதியில் 4 சசத்திர சிகிச்சை கூடங்கள் காணப்படுவதுடன் அவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சிறப்பு அதிதிகள் பார்வையிட்டதுடன், வைத்தியசாலை நிர்வாகத்தினரால் உயர்ஸ்தானிகர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மோப்ப நாய்கள் மூலம் வைத்தியசாலை வளாகம் பரிசோதிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05