Header Logo

கிழக்கு
சடலமாக மீட்கப்பட்ட வைத்திய நிபுணரின் மனைவி!

Nov 5, 2024 - 06:19 PM -

0

சடலமாக மீட்கப்பட்ட வைத்திய நிபுணரின் மனைவி!

திருகோணமலை நகரில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உள்ள குடியிருப்பில் பிரபல வைத்திய நிபுணரின் ஒருவரின் மனைவி கத்திக்குத்துக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, உவர்மலையில் உள்ள பிரபல வைத்திய நிபுணருக்கு சொந்தமான வைத்தியசாலையில் உள்ள அவரது வீட்டிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் குறித்த வைத்தியசாலையின் உரிமையாளரான வைத்திய நிபுணரின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வைத்தியரின் மனைவி இன்று அதிகாலை லண்டனிலிருந்து திருகோணமலை வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் குறித்த வைத்திய நிபுணரின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 
--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title