Header Logo

உலகம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு

Nov 5, 2024 - 08:04 PM -

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு

அமெரிக்காவின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இன்று மாலை 4:30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நாளை காலை 5.30க்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

வாக்காளர்கள் தங்களின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக உள்ளூர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருவதை காணக்கூடியதாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை இடம்பெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இன்று ஜனாதிபதி தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள 7 மாகாணங்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன.

அமெரிக்க நாட்டிற்கு ஹவாய், அலாஸ்கா உள்பட மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மாகாணங்களில் காலம் காலமாகவே குடியரசு கட்சிக்கோ அல்லது ஜனநாயக கட்சிக்கோ அதிக வாக்குகள் கிடைப்பது வழக்கமானதாக இருந்து வருகிறது. அவை தவிர்த்து 7 மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படுகின்றன. இந்த மாகாணங்களில் எப்போது எந்த கட்சி வெல்லும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

அதனால் பொதுவாகவே இங்கு போட்டிகள் கடுமையாக இருக்கும். அதன்படி ஸ்விங் மாகாணங்களான அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்ச்ன் ஆகிய மாகாணங்களின் வெற்றி நிலவரமே ஜனாதிபதியை தேர்வு செய்வதில் முக்கிய திருப்பு முனையாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title