Nov 5, 2024 - 08:53 PM -
0
ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டிலுள்ள பல அரசியல் கட்சிகளை அழித்துள்ளதாகவும், அவரது அரசியலுக்கு மக்கள் விடுதலை முன்னணியே முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இரத்மலானையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வஜன அதிகாரத்தின் இரத்மலானை தொகுதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறப்பு விழா இன்று (05) காலை சர்வஜன அதிகாரத்தின்தலைவர் திலித் ஜயவீர தலைமையில் இடம்பெற்றது.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,
"இன்று இலங்கையில் உயிர்ப்புடன் ஒரே அரசியல் சக்தியாக சர்வஜன அதிகாரம் மாறியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளின் கதைகளையும் முடித்துவிட்டார்.ரணில் விக்கிரமசிங்கவின் செயற்கை அரசியலுக்கு முடிவு கட்டும் கடைசி அரசியல் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி மாறிவிட்டது."
"ஹரிணி அமரசூரிய மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினர்கள் இப்போது பதவிகளை வகிக்கின்றனர். சிவப்பு நிறத்தில் உள்ளவர்கள் அல்ல... இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளவர்கள்... மணி சின்னத்தின் மக்கள் அல்ல... திசைகாட்டி மக்கள்."
"இந்த துணிச்சலான எதிர்க்கட்சியை தைரியமான நாங்கள் கட்டமைக்கிறோம், துணிச்சல் என்று தைரியமான வார்த்தையால் நாங்கள் பேசவில்லை. இந்த பிரபஞ்சத்தில் அரசியல் செய்ய நாங்கள் பயப்படவில்லை. இதுதான் சர்வஜன அதிகாரம் என்றார்."