செய்திகள்
ஜனாதிபதி புகைப்படத்துடன் 5000 ரூபா போலி நாணயத்தாள் - ஒருவர் கைது

Nov 5, 2024 - 09:18 PM -

0

ஜனாதிபதி புகைப்படத்துடன் 5000 ரூபா போலி நாணயத்தாள் - ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்தை பயன்படுத்திய சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


ஜனாதிபதியின் உருவம் பொறித்த போலியான 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வௌியிட்டதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


38 வயதான குறித்த சந்தேகநபர் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


சந்தேகநபர் அத்துருகிரிய, கொரதொட, மஹதெணிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05