செய்திகள்
ஹாலிஎல, வெலிமடை வீதியில் மண்சரிவு அபாயம்

Nov 5, 2024 - 10:12 PM -

0

ஹாலிஎல, வெலிமடை வீதியில் மண்சரிவு அபாயம்

ஹாலிஎல, வெலிமடை வீதியின் 100 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் இன்று (05) முதல் மண்சரிவு அபாயம் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பதுளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

மண்சரிவின் நிலை மோசமாக இருக்கலாம் என்பதால், வீதியில் செல்லும் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் தங்கள் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

 

மேலும், ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எல். எம். உதய குமார தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05