மலையகம்
CWC யில் இருந்து விலகிய எஸ். பிலிப்குமார்!

Nov 6, 2024 - 03:49 PM -

0

CWC யில் இருந்து விலகிய எஸ். பிலிப்குமார்!

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ். பிலிப்குமார் இலங்கை தொழிலாளர் காங்ரஸில் இருந்து தாம் விலகியுள்ளதாகவும் கட்சியிலிருந்து தாம் விலகிகொள்வதாகவும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்ரஸில் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரோடு அரசியல் ஈடுபட்டு வந்த பிலிப்குமார் 37வருடங்கள் இந்த கட்சியில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததோடு பிரதேச சபை உறுப்பினராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

இதுவரை காலமும் எந்தவித கட்சி தாவல்களையும் மேற்கொள்ளாது ஒரே கட்சியான இலங்கை தொழிலாளர் காங்ரஸில் மாத்திரம் தாம் அங்கம் வகித்து வந்ததாகவும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானங்களையும் எட்டப்படவில்லை என்றும், தனது 37 வருடகால அரசியலினால் தனது வாழ்க்கையை இந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை தொடர்பு கொண்ட போதும் அது பயன் அளிக்கவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05