Nov 6, 2024 - 10:57 PM -
0
பாராளுமன்ற சம்பளம் அல்லது சலுகைகள் எதுவுமின்றி மக்களுக்கு சேவையாற்ற தான் உள்ளிட்ட சர்வஜன அதிகாரத்தின் பிரதிநிதிகள் தயாராக உள்ளதாக அதன் தலைவரும் தொழில்முனைவோருமான சட்டத்தரணி திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பேலியகொடை, தரமடுவத்த பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய திலித் ஜயவீர மேலும் கூறியதாவது,
“இம்முறை பாராளுமன்றம் செல்லும் நாம் யாரும் பாராளுமன்றத்தின் சம்பளமோ அல்லது ஏனைய சலுகைகளையோ பெறப் போவது இல்லை. உணவகத்தில் இருந்து உணவு கூட எடுக்க மாட்டோம். எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. உங்களுக்காக உழைக்கிறோம்... எந்த சலுகையும் இல்லாமல். இம்முறை பாராளுமன்றத்தின் மாற்றம் அதுதான். பாராளுமன்றத்தில் முன்மொழிய எதிர்ப்பார்த்துள்ளோம். இந்த முறையை மாற்றி புதிய முறைக்கு செல்ல.
"இந்த அரசியல் மாற வேண்டும் என்றால், எங்களைப் போன்ற தொழில் முனைவோர்... கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.. மற்றைய நாடுகளைப் போல. அப்போது அவர்களுக்கு முடியும் இந்த மக்களுக்கு சேவை செய்ய. இல்லையென்றால் சென்றது முதல் எவ்வளவாவது கொள்ளையிட பார்ப்பார்கள். அரசாங்கத்தால் தீர்வுகளை வழங்க முடியாவிட்டால், நாங்கள் தீர்வுகளை முன்வைப்போம். பதக்கத்திற்கு புள்ளடி இடுங்கள். உங்கள் வாழ்க்கை மாறும்."