விளையாட்டு
ஐபிஎல் ஏலத்திற்கு வரும் இங்கிலாந்து முன்னாள் வீரர்!

Nov 7, 2024 - 11:08 AM -

0

ஐபிஎல் ஏலத்திற்கு வரும் இங்கிலாந்து முன்னாள் வீரர்!

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாதம் 24, 25 திகதிகளில் நடைபெறம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

 

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம். டி20 போட்டியில் கடைசியாக 2014 இல் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐபிஎல் ஏலத்திற்கு 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிட்டதக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05