Nov 7, 2024 - 04:51 PM -
0
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
அன்றாடம் நிகழ்ச்சியை பார்த்து தவறாமல் கமெண்ட் செய்யும் பெரிய கூட்டமே இருக்கிறது. தற்போது 8 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த சீசன் மூலம் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார் விஜய் சேதுபதி.
அப்படி விஜய்யில் ஒளிபரப்பான 7 ஆவது சீசனில் பங்குபெற்ற ஒரு போட்டியாளர் பிரதீப் ஆண்டனி. மக்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் சில காரணங்களால் ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இவருக்கு கடந்த ஜுன் மாதம் மிகவும் சிம்பிளான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்நிலையில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் முடிந்துள்ளது.