Nov 8, 2024 - 09:02 AM -
0
கிராந்துருகோட்டே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிடிய பிரதேசத்தில் நேற்று (07) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 57 வயதுடைய உல்ஹிடிய, கிராந்துகோட்டே பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று குறித்த நபர் வீட்டுக்கு முன்பாக உள்ள வயல்வௌியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டே பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.