Header Logo

கிழக்கு
ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் சூரசம்ஹாரம்!

Nov 8, 2024 - 09:54 AM -

0

ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் சூரசம்ஹாரம்!

கந்தஷஷ்டி விரத்தின் மிக முக்கியத்துவமான நிகழ்வான சூரம்சம்ஹாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு, ஈழத்து திருச்செந்தூர் ஆலயத்தில் கந்தஷஷ்டி விரதத்தின் சூரசம்ஹார நிகழ்வு நேற்று (07) மாலை சிற்ப்பாக நடைபெற்றது.

ஈழத்து திருச்செந்தூர் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தஷஷ்டி விரதம் கடந்த 02 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமானது.

முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கந்தஷஷ்டி விரதத்திற்கான கும்பம் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்று வந்தன.

ஐந்து தினங்கள் பக்தர்கள் விரதமிருந்து கந்தஷஷ்டி விரதம் அனுஸ்டித்ததுடன் தினமும் ஆலயத்தில் கந்தபுராண படலம் பாடும் நிகழ்வும் நடைபெற்றது.

நேற்று பிற்பகல் சூரசம்ஹாரத்திற்கான வேல் கல்லடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் பெற்றுக்கொண்டு வேல்படையானது ஆலயத்தினை ஊர்வலமாக வந்தடைந்து. அதனை தொடர்ந்து சூரனை வதம் செய்யும்போது நடைபெற்ற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சூரன்போர் நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூதப்படை சூழ முருகப்பெருமான் ஊர்வலமாக சென்று சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title