Nov 8, 2024 - 10:54 AM -
0
காலாவதியான மற்றும் ஊழல்வாத அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.
கண்டியில் நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தமது கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட திலித் ஜயவீர,
"தனது வருமானம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. செலவு மூன்று மடங்காக, நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை. உங்களுக்கு இவ்வாறே இன்னும் ஐந்து வருடங்கள் கஷ்டப்பட முடியுமா? எனவே, துணிச்சலான எதிர்க்கட்சி என்ற வகையில், சர்வஜன அதிகாரத்தின் மூலோபாய திட்டத்தை நாம் அனுரகுமாரவுக்கு வழங்குகிறோம். எந்தவித பாசாங்குத்தனமும் இல்லாமல்"
"நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். காலாவதியான ஊழல் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த நாடு நேர்மையான அரசியலைக் கோருகிறது. எனவேதான் துணிச்சலான எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்குள் நுழைய வேண்டும். நாங்கள் வளர்ந்து வரும் இலங்கையையே காண விரும்புகிறோம். எனவே இதை ஒரு அங்குலம் அல்லது அதற்கு மேல் முன்னோக்கி கொண்டு செல்லவும்"