Nov 8, 2024 - 06:52 PM -
0
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது Gautam Tinnanuri இயக்கத்தில் தனது 12 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அவரது முந்தைய படங்கள் பெரிய தோல்வி என்பதால் மீண்டும் Comeback கொடுக்க விஜய் தேவரகொண்டா முயற்சித்து வருகிறார்.
அடுத்த வருடம் மார்ச் 28 ஆம் திகதி இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் தேவரகொண்டா தற்போது மாடிப்படியில் நடந்து வரும்போது தவறி விழுந்து காயமடைந்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. காயம் ஏற்பட்டாலும் அவர் தொடர்ந்து தனது படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறாராம்.