விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம்!

Nov 9, 2024 - 06:35 AM -

0

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம்!

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

 

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (08) டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவரில் 202 ஓட்டங்களை குவித்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார்.

 

சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2 ஆவது சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

 

203 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05