சினிமா
அஜித்தை ஓவர்டேக் செய்த சிவகார்த்திகேயன்!

Nov 9, 2024 - 06:54 AM -

0

அஜித்தை ஓவர்டேக் செய்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை பற்றி தான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையும் பேசி கொண்டிருக்கிறது. படம் சூப்பர் என ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் படக்குழுவை அழைத்து பார்ட்டி இருக்கின்றனர்.

 

அதே நேரத்தில் இந்த படம் காஷ்மீர் அரசியல் பற்றி சுத்தமாக பேசாமல் போனது ஏன் என இயக்குனர் வசந்தபாலன், கோபி நைனார் உள்ளிட்ட சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

மேலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் தற்போது போராட தொடங்கி இருக்கின்றன.

 

இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் தற்போது அமரன் படம் கேரளாவில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது.

 

அமரன் 7 கோடி ரூபாய்க்கும் மேல் அங்கு வசூலித்து இருக்கிறது. அது அஜித் கெரியரில் கேரளாவில் அதிகபட்சமாக வசூலித்த ஆரம்பம் பட வசூலான 6.25 கோடி ரூபாயை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments
0

MOST READ