சினிமா
கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த விஜே பார்வதி!

Nov 9, 2024 - 07:28 AM -

0

கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த விஜே பார்வதி!

யூடியூப் சேனல் மூலம் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே பார்வதி. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

 

சமீபத்தில் தன்னுடைய பதிவுக்கு மோசமான கருத்துக்களை கூறி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து ஒரு  வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ரொம்ப மோசமா  டிரஸ் போடுற வெக்கமா இல்லையா என்று கூறியிருக்கிறார்.

 

அதற்கு பார்வதி, எனக்கு வெக்கமே இல்ல, எனக்கு அழகான உடல் இருக்கு, கோவில் சிலைகளிலேயே, மார்பகங்கள் தெரிகிற மாதிரிதான் சித்திரங்கள் இருக்கு. அதைமட்டும் தெய்வீகமாக பார்க்கும்போது, ஒரு பெண் மாடர்ன் டிரஸ் போட்டால் உங்க பார்வை எதுக்கு தப்பா போகிறது.

 

இதைநான் பல இடங்களில் பேசி இருக்கிறேன். ஒரு பெண்ணோட ஆடையை வைத்து அவளோட குணத்தை தீர்மானிக்காதீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார் விஜே பார்வதி. இதற்கு பலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05