Nov 9, 2024 - 08:10 AM -
0
சூர்யாவின் கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தை பிரம்மாண்டமாக pan இந்தியா ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
பல ஆயிரம் தியேட்டர்களில் உலகம் முழுக்க கங்குவா ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
சென்னை மட்டுமின்றி ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கங்குவா படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. படத்தை பார்த்த சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறது.
மேலும் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் மற்றும் 34 நிமிடங்கள் என தகவல் வந்திருக்கிறது.